ஹட்வில்வால்டில் வியாழக்கிழமை பிற்பகல் இரண்டு கார்கள் மோதிக்கொண்டதாக பெர்ன் கன்டோனல் பொலிஸ் தெரிவித்துள்ளது.
ஸ்வார்சன்பாக்கிலிருந்து டூரன்ரோத் நோக்கிச் சென்ற ஒரு பெண் ஓட்டுநர், வளைவான இடம் ஒன்றில், எதிரே வந்த ஒரு காரின் மீது மோதினார்.
இதையடுத்து, எதிரே வந்த கார் கவிழ்ந்துள்ளது.
டூரன்ரோத் நோக்கிச் சென்ற காரின் ஓட்டுநர் மற்றும் பயணி விபத்தில் காயமடைந்தனர்.
ஓட்டுநர் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பயணி அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வி
பத்து மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக பிரதான வீதி சுமார் மூன்று மணி நேரம் மூடப்பட்டது.
மூலம்-20min