Zurich, Uster இல் உள்ள Volg supermarket இல், துப்பாக்கி முனையில் கொள்ளை இடம்பெற்றுள்ளது.
நேற்று அதிகாலை 5.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து பெண் பணியாளரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.
அங்கிருந்த சில நூறு பிராங் பணத்துடன் அவர் தப்பிச் சென்ற நிலையில் உடனடியாக அவரைத் தேடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் அவர் கைது செய்யப்படவில்லை என சூரிஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்-20min