சூரிச் விமான நிலையத்தில் குளிர்ச்சியான வறண்ட காற்று வீசியதால் நேற்று விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் பல விமானங்கள் தாமதமாகின, சில ரத்து செய்யப்பட்டன. 18 சுவிஸ் விமானங்கள் நேற்று பிற்பகல் வரை ரத்து செய்யப்பட்டன.
பிரஸ்ஸல்ஸ், நைஸ், டுசெல்டார்ஃப், பெர்லின், ஸ்டட்கார்ட், ஹனோவர், போலோக்னா, லண்டன் ஹீத்ரோ மற்றும் பிராங்பேர்ட்டுக்கு தலா ஒரு புறப்படும் மற்றும் ஒரு திரும்பும் விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- Swissinfo