Fribourg கன்டோனில் உள்ள Route de Béthanie இல்,இடம்பெற்ற விபத்தில் 16 வயதுடைய பெண் மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்துள்ளார்.
நேற்றுக்காலை 10.20 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Châbles இல் இருந்து Cheyres நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 16 வயது பெண், வலப்புற திருப்பம் ஒன்றில் எதிரோ வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானார்.
பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் உயிரிழந்துள்ளார்.
மூலம்- 20min