-3.9 C
New York
Thursday, January 1, 2026

கார் மோதியதால் கவிழ்ந்த விநியோக வாகனம்.

Aarau, நகரில் உள்ள Telli சுற்றுவட்டத்தில், வெள்ளிக்கிழமை மதியம்,  இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.

சுற்றுவட்டம் வழியாக சென்று கொண்டிருந்த விநியோக வான் மீது, வேகமாகச் சென்ற கார் ஒன்று பின்புறமாக மோதியது.இதனால் விநியோக வான், பக்கவாட்டில் கவிழ்ந்தது.

இதில் 45 வயதான விநியோக வாகன ஓட்டுநரை தீயணைப்பு வீரர்கள் வாகனத்திலிருந்து மீட்டனர்.

அவருக்கும் 83 வயது பெண் கார் ஓட்டுநருக்கும் மிதமான காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கார் ஓட்டுநரின் ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles