21.8 C
New York
Monday, September 8, 2025

சுவிட்சர்லாந்திலும் பரவுகிறது கோவிட்டின் புதிய திரிபு.

கோவிட்-19 வைரஸின் புதிய திரிபான LP.8.1 சுவிட்சர்லாந்திலும் பரவத் தொடங்கியுள்ளது.

கடந்த இலையுதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த திரிபு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் வேகமாகப் பரவத் தொடங்கியது.

ஜனவரியில்,LP.8.1 ஐ கண்காணிக்க வேண்டிய திரிபு என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.

இப்போது இது ஐரோப்பாவிலும் அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில், இந்த திரிபு இப்போது 55 சதவீத தொற்றுகளுக்கு காரணமாக உள்ளது.

பிரித்தானியாவில்  LP.8.1 குறைந்தது 60 சதவீத தொற்றுகளுக்கு காரணமாகிறது.

இந்த திரிபு சுவிஸ் கழிவுநீரிலும் கண்டறியப்பட்டுள்ளதாக, பொது சுகாதாரத்திற்கான பெடரல் அலுவலகம் (FOPH) உறுதிப்படுத்தியுள்ளது.

LP.8 திரிபுக் குழுவின் வைரஸ்கள் பல மாதங்களாக சுவிட்சர்லாந்து முழுவதும் உள்ள கழிவுநீரில் கண்டறியப்பட்டுள்ளன. அந்தப் போக்கு அதிகரித்து வருகிறது.

கழிவுநீரில் உள்ள மொத்த வைரஸ்களில் LP.8 தற்போது பிராந்தியத்தைப் பொறுத்து 30 முதல் 60 சதவீதம் வரை உள்ளது.

LP.8.1 இன் அறிகுறிகள் மற்ற வகைகளை விட கடுமையானதாகத் தெரியவில்லை.

எனவே, LP.8.1 ஆல் ஏற்படும் பொது சுகாதார அபாயத்தை உலக சுகாதார நிறுவனம் குறைவாகக் கருதுகிறது.

மூலம்-20min.

Related Articles

Latest Articles