-4.8 C
New York
Sunday, December 28, 2025

எழுச்சிக் கவிஞர் பண்டிதர் வீ.பரந்தாமன் காலமானார்.

எழுச்சிக் கவிஞர் பண்டிதர் வீ.பரந்தாமன், வயது மூப்பினால், பருத்தித்துறை புலோலியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றுக்காலை காலமானார்.

ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பண்டிதர் பரந்தாமன், ஈழவிடுதலைப் போராட்டத்தில் அரசியல் பரப்புரைப் பணிகளில் தீவிரமாக பங்கெடுத்திருந்தார்.

பண்டிதர் பரந்தாமன் “மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்“ என்று தொடங்கும் மாவீரர் நினைவுப் பாடல் உள்ளிட்ட ஏராளமான எழுச்சிப் பாடல்களையும் இயற்றியுள்ளார்.

அவர் கெரில்லா போர் விரகுகள் என்ற போராட்ட நூல் உள்ளிட்ட பல நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

போர் முடிவடைந்த பின்னர் கிளிநொச்சி கவின் கலைக் கல்லூரியை ஆரம்பித்து தமிழ் மற்றும் கலைத்துறை வளர்ச்சிக்குப் பணியாற்றினார்.

Related Articles

Latest Articles