16.4 C
New York
Tuesday, March 31, 2026

இன்று பிற்பகல் இடியுடன் கடும் மழை குறித்து எச்சரிக்கை.

இன்று பிற்பகல் மோசமான வானிலை குறித்து சுவிஸ் ஃபெடரல் வானிலை சேவை (MeteoSwiss) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனை ஆபத்து நிலை 3 என MeteoSwiss அறிவித்துள்ளது.

டிசினோ மற்றும் கிராபுண்டனின் சில பகுதிகளைத் தவிர சுவிட்சர்லாந்தின் பெரும்பகுதிகள் இதனால் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 3 மணி முதல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், இரவு 10 மணி வரை  இது நீடிக்கும்.

இதனால் தீவிர மின்னல் தாக்குதல்கள், கடும் காற்றினால் கிளைகள் முறிதல், மரங்கள் விழுதல் மற்றும் ஆலங்கட்டி மழை போன்ற தாக்கங்கள் ஏற்படும் என்றும் Meteo Switzerland மேலும் தெரிவித்துள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles