-0.3 C
New York
Tuesday, December 30, 2025

மூவரை கொலை செய்தவர் மகனையும் தேடிச் சென்றார்.

சோலோதர்னில் ஒருவர் தனது முன்னாள் மனைவி,அவரது தாய், தந்தை ஆகியோரை ஒருவர் படுகொலை செய்துள்ளார்.

சோலோதர்ன் கன்டோனில் உள்ள எகர்கிங்கனில்  பெண் ஒருவர் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

சிறிது நேரத்திலேயே, 41 வயது நபர் ஒருவர் உள்ளூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

அவரது வாக்குமூலத்தின் பேரில், அயலில் உள்ள ஹேகென்டார்ஃபில்   நகராட்சியில் உள்ள ஒரு வீட்டில் மேலும் இரண்டு உடல்களை கன்டோனல் பொலிசார் கண்டுபிடித்தனர்.

ஓய்வு பெற்ற தம்பதியினரான அவர்கள் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சரணடைந்த சந்தேக நபர் இறந்த பெண்ணின் முன்னாள் கணவர் என்றும், தம்பதியருக்கு எட்டு வயதில் ஒரு குழந்தை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலைகளைச் செய்த பிறகு, சந்தேக நபர் தனது மகனை அழைத்து வருவதற்காக அவரது பாடசாலைக்குச் சென்றுள்ளார்.

ஆனால் குழந்தையை ஒப்படைக்க பாடசாலை நிர்வாகம் மறுத்துவிட்டது.

பெற்றோருக்கு இடையேயான மோதல்கள்  குறித்து ஆசிரியருக்குத் தெரியும் என்றும், தாயின்  முன் அனுமதியின்றி குழந்தையை ஒருபோதும் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles