சியோனில் உள்ள லெஸ் ஐல்ஸில் 22 வயது இளைஞன் ஒருவர் நீச்சல் விபத்தில் இறந்தார்.
நேற்று இரவு 8 மணியளவில் குறித்த இளைஞன் சியோனில் உள்ள டொமைன் டெஸ் ஐல்ஸில் உள்ள ஏரியில் நீந்தச் சென்றார்.
- Advertisement -

அவர் திடீரென நீரில் மூழ்கி இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரையில் இருந்த மூன்றாம் தரப்பினர் உடனடியாக அவசர சேவைகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
வாலைஸ் கன்டோனல் காவல்துறை உள்ளிட்ட மீட்புக் குழுவினர் விரைந்து உதவச் சென்றனர்.
இரவு 9:30 மணியளவில், சூழியோடிகள் அவரது உயிரற்ற உடலைக் கண்டுபிடித்து மீட்டனர்.
உயிரிழந்தவர் செர்பியர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- bluewin


