-5.7 C
New York
Sunday, December 28, 2025

பாதசாரிக் கடவையில் சிறுமி மீது மோதிய கார்.

டேகல்ஸ்வாங்கன் டோர்ஃப் பேருந்து நிறுத்தம் அருகே,  13 வயது சிறுமி ஒருவர் பாதசாரி கடவையில் வீதியைக் கடக்க முயன்ற போது, கார் மோதி படுகாயம் அடைந்துள்ளார்.

நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 காரில் மோதிய சிறுமி, வீசப்பட்டு, பலத்த காயமடைந்ததாக சூரிச் கன்டோனல் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவசர மருத்துவரும் மீட்புக் குழுவும் சம்பவ இடத்தில் குழந்தைக்கு மருத்துவ உதவி வழங்கினர்.

விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles