பெண்கள் யூரோ கால்பந்து போட்டி நடைபெறவுள்ள மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில், ட்ரோன்களை பறக்கவிடுவதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென் காலன் அதிகாரிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இன்று தொடங்கும் பெண்கள் யூரோ கால்பந்து போட்டியின், மூன்று ஆட்டங்கள் சென் காலனில் நடைபெறவுள்ளன.
இந்த நாட்களில் இந்த பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க விடுவதற்கான தடை உத்தரவு அமுல்படுத்தப்படும்.
25 கிலோ வரை எடையுள்ள ஆளில்லா விமானங்களுக்கு முழுமையான பறப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
யூரோ 2025 போட்டிகள் சென் காலனில் நடைபெறும் ஜூலை 4, 9 மற்றும் 13 ஆகிய திகதிகளில் இது பொருந்தும்.
இந்தத் தடை சென் காலன் நகரின் மேற்கில் உள்ள கால்பந்து மைதானத்திற்கு மேலே உள்ள இரண்டு கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட வான்வெளிக்கு பொருந்தும்.
தடையை மீறும் ட்ரோன்கள் தடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படலாம்.
மூலம்- swissinfo