ப்ரிபோர்க் கன்டோனில் உள்ள கிவிசியஸில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பெண் மற்றும் அவரது குழந்தையின் சடலங்கள் வெட்டுக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் மாலை 4:45 மணியளவில், தகவல் அறிந்து காவல்துறையினர் சென்ற போது, இருவரினது சடலங்களும் மீட்கப்பட்டன.
கொல்லப்பட்ட பெண்ணின் கணவன் சந்தேகத்தின் பேரில், சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.
காயமடைந்த நிலையில் இருந்த அவர், பொலிஸ் பாதுகாப்புடன் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
43 வயதான பல்கேரிய நாட்டவர், மாசிடோனிய நாட்டைச் சேர்ந்த தனது 30 வயது மனைவியை பலமுறை கத்தியால் குத்திய, பின்னர் அவர்களின் ஆறு வார குழந்தையைத் தாக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பின்னர் அவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிறிய காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூலம்- 20min

