கால்பந்தாட்ட மைதானத்தில் நடுவரைத் தாக்கிய, இளம் வீரர் ஒருவரின் தந்தைக்கு 3 ஆண்டுகள் மைதானத்துக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மே 31 ஆம் திகதி, ஷாஃப்ட்லண்டில் மெர்கனுக்கு எதிரான C-ஜூனியர்ஸ் கால்பந்து போட்டியின் போது இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
தனது மகனுக்கு எதிராக நியாயமற்ற தீர்ப்பை நடுவர் வழங்கியதால் அவரது தந்தைய கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர் வில்மெர்கனைச் சேர்ந்த ஒரு ஜூனியர் வீரரின் தந்தை ஆவார்.
இந்த சம்பவம் சுவிட்சர்லாந்து முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், ஆர்காவ் கால்பந்து சங்கம், ஜூலை 3, 2028 வரை முழுமையாக மைதானத்திலிருந்து தடை செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட கிளப்பான FC வில்மெர்கன், 3,500 பிராங் அபராதமும் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மூலம்- 20min.