நிதி நெருக்கடி காரணமாக, ஜெனீவாவை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை 2025-2026 ஆம் ஆண்டில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமை குறித்து “கவலைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான சுவிஸ் தூதுவர் ஜூர்க் லாபருக்கு செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில், இந்த ஆண்டு திட்டமிட்டபடி வழங்க முடியாத சுமார் 15 அறிக்கைகள் குறித்து வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார்.
ருவாண்டா ஆதரவு பெற்ற M23 கிளர்ச்சியாளர்கள் கிழக்கு கொங்கோ ஜனநாயக குடியரசில் உள்ள கோமா நகரத்தைக் கைப்பற்றியபோது இடம்பெற்ற மீறல் நிலைமை குறித்த சுயாதீன புலனாய்வாளர்களின் அறிக்கையும் இதில் அடங்கும்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை மாறிவரும் உலக ஒழுங்கை எதிர்கொள்கிறது
நிதிச் சிக்கல்களின் பிற விளைவுகளில், அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கான உரிமையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளைப் பயன்படுத்துவது குறித்த உலகளாவிய ஆலோசனையும் ஒன்றாகும்.
சுவிட்சர்லாந்து முன்வைத்த தீர்மானத்தைத் தொடர்ந்து இது கோரப்பட்டது, ஆனால் அது நிறைவேற்றப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo

