ஹெட்லிங்கனில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
நேற்று இரவு 9 மணியளவில், சூரிச் கன்டோனல் காவல் மையத்திற்கு ஹெட்லிங்கனில் நடந்த ஒரு குடும்ப வன்முறை சம்பவம் குறித்த புகார் கிடைத்தது.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தச் சம்பவத்தில் 37 வயதுடைய நபர் காயமடைந்தார்.
இந்த நடவடிக்கையின் போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்தனர்.
பொலிசார் வருவதற்கு முன்னரே அந்த நபரின் மனைவி காயமடைந்தார். நான்கு பேரும் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மூலம்- 20min.