தாய்லாந்தில் இருந்து வந்த இரண்டு பயணிகள் ஜெனீவா விமான நிலையத்தில் 100 கிலோகிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூலை 23 ஆம் திகதி இந்த சம்பவங்கள் நடந்ததாக சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புக்கான பெடரல் அலுவலகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
சுங்க அதிகாரிகள் முதலில் 31 வயதான ஸ்பானியர் ஒருவரின் இரண்டு சூட்கேஸ்களை சோதனை செய்த போது, 53 கிலோகிராம் கஞ்சாவை கண்டுபிடித்தனர்.
சிறிது நேரத்திற்குப் பின்னர் அதே விமானத்தில் பயணம் செய்த 59 வயது பிரெஞ்சுக்காரின் இரண்டு சூட்கேஸ்களில் இருந்து 53 கிலோகிராம் கஞ்சாவையும் சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர்.
இரண்டு பேரும் போதைப் பொருட்களுடன் கன்டோனல் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மூலம்- swissinfo

