Ramsen அருகேயுள்ள Wilen இல், கோழிப் பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில், 17 ஆயிரம் புரொய்லர் கோழிகள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று அதிகாலை 5 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு பிரிவினர் விரைந்து சென்று தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்.
எனினும், 7.45 மணியளவில் கோழிப் பண்ணை முற்றாக எரிந்து போன நிலையில், 17 ஆயிரம் புரொய்லர் கோழிகளும் உயிரிழந்தன.
இந்த தீவிபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.