அமெரிக்க வரிகள் அறிவிக்கப்பட்ட பின்னர்,சுவிஸ் சொக்லேட் உற்பத்தியாளரான மேஸ்ட்ரானி அமெரிக்காவிற்கு அதன் விநியோகங்களை நிறுத்தி வைத்துள்ளர்.
சில வாரங்களுக்கு தேவையான கையிருப்பு மாத்திரமே அங்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரசியல்வாதிகள் பேச்சுவார்த்தைகளில் வெற்றி பெறுவார்கள் என்று நிறுவனம் நம்புகிறது.
சென் காலனை தளமாகக் கொண்ட மேஸ்ட்ரானியின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டோஃப் பிர்ச்லர் இதுதொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,
சொக்லேட் மீது குறைந்த இலாபமே உள்ளதால், அமெரிக்காவின் வரிகள், அதனை ஏற்க அனுமதிக்காது. அதற்கு பதிலாக, விலைகள் அதிகரிக்கப்பட வேண்டும். அத்தகைய விலை அதிகரிப்பு அமெரிக்காவில் நிறுவனத்தின் போட்டித்தன்மையை பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
1852 இல் நிறுவப்பட்ட ஒரு குடும்ப வணிகமாக, மேஸ்ட்ரானி உலகின் மிகப்பெரிய சொக்லேட் சந்தையைக் கொண்டுள்ளது.
மூலம்- swissinfo

