Pöschwies சிறைச்சாலையின் ஊழியர் ஒருவர், சிறைச்சாலைக்குள் பொருட்களைக் கடத்திச் சென்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறைச்சாலைக்குள் நடக்கும் சட்டவிரோத வர்த்தகம் குறித்த தகவலைப் பெற்ற பின்னர் சூரிச் கன்டோனல் காவல்துறை விசாரணைகளில் இறங்கியது.
இதையடுத்து சிறைச்சாலை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை நீதிமன்றம் விசாரணைக்கு முந்தைய காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
விசாரணை நடந்து வருவதால் கூடுதல் விவரங்களை வெளியிட சூரிச் காவல்துறை மறுத்துள்ளது.
மூலம்- 20min.

