முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை சீராக இருப்பதாக, கொழும்பு தேசிய மருத்துவமனையின் செயற்பாட்டு பணிப்பாளர், மருத்துவர் பிரதீப் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
“வயது மூப்பு காரணமாக, ரணில் விக்ரமசிங்கவின் இரத்த அழுத்தம் சற்று அதிகமாக உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே அவரை தீவிர சிசிக்சைப் பிரிவுக்கு மாற்றியுள்ளோம். அவர் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிட்டத்தட்ட 13 மணி நேரம் உணவு, குடிநீர் இல்லாமல் இருந்ததால், நீரிழப்பு ஏற்பட்டு, சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதற்கு காரணம் என்று மருத்துவ வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.