இரண்டு இரவுகள் நீடித்த கலவரத்திற்குப் பின்னர், சுவிஸ் நகரமான லௌசானில் உள்ள பிரேலாஸ் மாவட்டத்தில் அமைதி திரும்பியுள்ளது.
நேற்று நள்ளிரவில் அப் பகுதியில் சிலர் வெளியே காணப்பட்ட போலும், இரவு முழுவதும் நிலைமை அமைதியாக இருந்தது.
தடுப்பு நடவடிக்கைகள், எங்கள் படைகள் சம்பவ இடத்தில் இருப்பது மற்றும் அமைதிக்கான வேண்டுகோள்கள் மற்றொரு இரவு கலவரத்தைத் தடுத்தன என்று வௌட் கன்டோனல் பொலிஸ் பேச்சாளர் டேவிட் குய்சோலன் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை, பொலிசாரிடம் இருந்து ஸ்கூட்டரில் தப்பிச் செல்லும்போது 17 வயது இளைஞன் விபத்திற்குள்ளாகி உயிரிழந்த சம்பவத்திற்குப் பின்னர், இளைஞர்கள் வன்முறைகளில் ஈடுபட்டனர்.
திங்கட்கிழமை மாலை மீண்டும் நிலைமை மோசமடைந்தது. முகமூடி அணிந்த இளைஞர்கள் குப்பைத் தொட்டிகள் மற்றும் கொள்கலன்களுக்கு தீ வைத்தனர்.
பொலிசாருடன் மோதிய அவர்களைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளும் ரப்பர் தோட்டாக்களும் பயன்படுத்தப்பட்டன.
எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பாக ஏழு பேரைக் கைது செய்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை காலை, பாதுகாப்புப் பொறுப்பில் உள்ள லொசான் நகராட்சி கவுன்சிலர் பியர்-அன்டோயின் ஹில்ட்பிரான்ட், மூன்றாவது இரவு கலவரத்தைத் தவிர்க்கும் முயற்சியாக அதிகரித்த தடுப்பு நடவடிக்கைகளை அறிவித்தார்.
மூலம்- swissinfo