சென்-லெஜியர்-லா சியேசாஸில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒரு ஆண் மற்றும் ஒரு சிறுவனின் உடல்களை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
அலறல் சத்தம் கேட்டதை அடுத்து, புதன்கிழமை காலை 11:50 மணியளவில், வௌத் கன்டோனல் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அவசர சேவைகள் கட்டடத்திற்குள் நுழைந்தன. அங்கு 54 வயதான பிரெஞ்சு குடிமகன் மற்றும் அவரது 14 வயது மகன், ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.
மூன்றாம் தரப்பினர் யாரும் இதில் ஈடுபடவில்லை என்பதை ஆரம்ப கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
மூலம்- swissinfo