18.8 C
New York
Wednesday, September 10, 2025

பிராந்திய வலயத்தில் பதற்ற நிலையை கருத்திற் கொண்டு எயார் கனடா நிறுவனம் எடுத்துள்ள தீர்மானம்

கனடா நாட்டின் , ரொறன்ரோவிலிருந்து இஸ்ரேலின் தெல் அவீவிற்கு பயணம் செய்யவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிராந்திய வலயத்தில் பதற்ற நிலையை கருத்திற் கொண்டு எயார் கனடா நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

எயார் கனடா விமானம் உள்ளுர் நேரப்படி நேற்றைய தினம் பிற்பகல் 4.25 மணிக்கு பியர்சன் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்தது.எனினும் அரசாங்கத்தின் பாதுகாப்பு நடைமுறைகளின் அடிப்படையில் விமான சேவையை ரத்து செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது.

மேலும் , பிராந்திய வலயத்தின் நிலைமைகளை கருத்திற் கொண்டு விமானப் பயணங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட உள்ளதாக எயார் கனடா விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles