எதிர்வரும் செப்டம்பர் 7ம் திகதி சுவிட்சர்லாந்தில் முழு சந்திர கிரகணத்தை அவதானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்று இரவு 8 மணியளவில் சந்திரன் கிழக்கில் உதயமாகும் போதே, கிரகணம் தொடங்கி விடும்.
முழு சந்திரகிரகணம். சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கும்.
இரவு 8:53 மணிக்கு கிரகணம் விலகத் தொடங்க, சந்திரன் மெதுவாக மீண்டும் பிரகாசமாகி இரவு 9:57 மணி முதல் முழுமையாகத் தெரியும்.
கிழக்கு-தென்கிழக்கில் இதனைத் தெளிவாக பார்க்க முடியும்.
கடைசியாக சுவிட்சர்லாந்து முழுவதும் காணக்கூடிய முழு சந்திர கிரகணம் 2018 ஜூலை இல் நிகழ்ந்தது.
அப்போது, சந்திரன் முழுமையாக 103 நிமிடங்கள் இருட்டாக இருந்தது.
மூலம்-20min.