19.8 C
New York
Sunday, September 7, 2025

பாடசாலைக்கு அச்சுறுத்தல் விடுத்த பெண் கைது.

வெள்ளிக்கிழமை காலை, வாலிசெல்லனில் உள்ள புர்கிலி பாடசாலைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த 500 இற்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் வெளியேற்றப்பட்டனர்.

பாடசாலை கட்டிடம் சோதனையிடப்பட்ட பின்னர், ஆபத்தான பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பொலிசார், மிரட்டல் விடுத்ததாக சந்தேகிக்கப்படும் 28 வயது பெண்ணை கைது செய்துள்ளனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles