ருடால்ஃப்ஸ்டெட்டன் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு நிறுவனத்தில் மின்முலாம் பூசும்போது ஏற்பட்ட இரசாயன தாக்கத்தினால், மஞ்சள் நிற புகை உருவானது,
தீயணைப்புத் துறை உடனடியாக பதிலளித்து, வோஹ்லென் பிராந்திய காவல்துறை மற்றும் பாதிக்கப்பட்ட நிறுவனத்தின் ஊழியர்களுடன் நெருக்கமாக செயற்பட்டது.
மின்முலாம் பூசுதல் செயல்பாட்டின் போது ஏற்பட்ட இரசாயன எதிர்வினையால் புகை ஏற்பட்டது என்பது சம்பவ இடத்தில் கண்டறியப்பட்டது.
வாயுக்கசிவினால், இரண்டு பேருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று ஆர்காவ் கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்- 20min.