சொக்லட்டின் தாயகம் என்று அழைக்கப்படும் சூரிச்சின், கில்ச்பெர்க்கில் உள்ள லிண்ட் சொக்லட் அருங்காட்சியகத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நேற்றுக் காலை, அருங்காட்சியக வளாகத்தில் உள்ள ஒரு அறையில் ஒரு இரசாயன விபத்து ஏற்பட்டது.
மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க, தீயணைப்புத் துறை ஒரு அறையில் காற்றைப் பிரித்தெடுத்து, வடிகட்டி, கட்டுப்படுத்த வேண்டியிருந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருங்காட்சியகம் மூடப்பட்டது, மேலும் விருந்தினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
எனினும எவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இருப்பினும், ஒரு நபர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அந்த நபர் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.