லொசானில் நேற்று பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, ஒரு கார் கூட்டத்திற்குள் மோதியது.
இந்தச் சம்பவத்தில், ஒரு ஆர்ப்பாட்டக்காரர் சிறிய காயமடைந்ததாக லொசான் நகர பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று, மாலை 7 மணியளவில், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கூட்டத்திற்குள் கார் நுழைந்துள்ளது.
அந்த நேரத்தில், சுமார் 1,500 முதல் 2,000 பேர் பிளேஸ் சௌடெரோனில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தனர்.
கார் வேண்டுமென்றே கூட்டத்திற்குள் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கூட்டத்தைக் கண்டதும் உள்ளே காரில் இருந்த நபர் பீதியடைந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
நாங்கள் அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தபோது திடீரென்று ஒரு BMW வேகமாகச் சென்று, கூட்டத்தை நோக்கிச் செல்லும் போது மேலும் வேகமெடுத்தது.
ஒரு கணம் பீதி ஏற்பட்டது, மக்கள் ஓடிவிட்டனர். அனைவரும் அதிர்ச்சியடைந்தனர் என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒருவர் கூறினார்.
மூலம்- bluewin

