18.1 C
New York
Friday, April 25, 2025

யாழ் கடற்பரப்பில் கைதான நபர்!

யாழ். (Jaffna) வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று (17.04.2024) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே கைது நடவடிக்கை குறித்த இடம்பெற்றுள்ளது.

கைது நடவடிக்கை
குறித்த நபர் அனுமதியற்ற மின் ஒளி பாய்ச்சி வலைகளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டிருப்பதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர் கட்டைக்காடு பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன் அவரது உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை கூறியுள்ளது.

Related Articles

Latest Articles