சுவிஸ் இராணுவம் மற்றும் பெடரல் புலனாய்வு சேவை (FIS) ஆகியவற்றுக்குப் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இராணுவத் தளபதி தோமஸ் சுஸ்லிக்குப் பதிலாக, பெனடிக்ட் ரூஸ் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெடரல் புலனாய்வு சேவையின் தலைவர் பதவிக்கு டஸ்ஸிக்குப் பதிலாக செர்ஜ் பவாட் கிறிஸ்டியன், நியமிக்கப்பட்டுள்ளார்.
இருவரும் வெள்ளிக்கிழமை சுவிஸ் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
60 வயதான மேஜர் ஜெனரல் பெனடிக்ட் ரூஸ் ஜனவரி 1 ஆம் திகதி இராணுவத் தளபதியாக தனது கடமைகளை ஏற்றுக்கொள்வார்.
1997 முதல் இராணுவத்தில் பல்வேறு பதவிகளை வகித்து வரும் அவர், ஓகஸ்ட் 2024 முதல் அவர் தரைப்படைகளின் தளபதியாக இருந்து வருகிறார்.
ஃப்ரிபோர்க்கைச் சேர்ந்த 52 வயதான செர்ஜ் பவாட், நவம்பர் 1 ஆம் திகதி பெடரல் புலனாய்வு சேவையின் தலைவராகப் பொறுப்பேற்பார்.
மார்ச் 2026 இறுதி வரை தான் பதவியில் இருப்பேன் என்று அறிவித்திருந்த கிறிஸ்டியன் டஸ்ஸி இந்த ஆண்டு இறுதியில் பதவி விலகுவார்.
மூலம்- swissinfo

