சூரிச்சில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்குப் பின்னால் உள்ள பிளாட்ஸ்பிட்ஸ் பகுதியை ஆக்கிரமிக்க வெள்ளிக்கிழமை மதியம் ஒரு குழுவினர் மேற்கொண்ட முயற்சியை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
முதலாளித்துவ எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்டவர்கள், அங்கு கூடிய போது, முன்கூட்டியே தகவல் அறிந்த பொலிசார், நகர மையத்தில் பாதுகாப்பை அதிகரித்தனர்.
நேற்று மாலை 5 மணிக்கு சற்று முன்னர், பல குழுக்கள் பிளாட்ஸ்பிட்ஸ் நடைபாதையை நெருங்கி வந்த போது, பொலிசார் அந்தப் பகுதிக்குள் நுழைந்தனர்.
அவர்கள் மீது போத்தல்கள் மற்றும் கற்கள் வீசப்பட்டன. கூட்டத்தைத் தடுக்க பொலிசார் தண்ணீர் பீரங்கி மற்றும் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தினர்.
சிலர் ஆக்கிரமிப்பாளர்கள் லிம்மாட் அல்லது பிற நுழைவாயில்கள் வழியாக தப்பியோடினர்.ஏனையவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
மாலை 6 மணிக்குப் பின்னர் மொத்தம் 233 பேரை சோதனை செய்து, அவர்களை வெளியேற உத்தரவிட்டனர்.
இரவு 9:50 மணிக்கு நடவடிக்கை முடிவடைந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்- swissinfo

