பெர்னீஸ் ஓபர்லாண்டில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் கோடைக்காலத்தில் பிக்பொக்கெட் மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதையடுத்து, பெர்னீஸ் கன்டோனல் பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையில், 20 திருட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்டர்லேக்கன், கிரிண்டெல்வால்ட் மற்றும் லாட்டர்ப்ரூனென் பகுதிகளிலும், மெய்ரிங்கனில் உள்ள ஆரே ஜோர்ஜ் மற்றும் ஜங்ஃப்ராஜோச் போன்ற பிரபலமான சுற்றுலா தலங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பலர் தற்காலிகமாக கைது செய்யப்பட்டு பின்னர் சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சிலர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பரபரப்பான இடங்களில் அல்லது கூட்ட நெரிசலில் பெறுமதியவாய்ந்த பொருட்களை சிறப்பு கவனம் செலுத்துமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மூலம்- swissinfo

