சுவிட்சர்லாந்து ஜனாதிபதி கரின் கெல்லர்-சுட்டர், வத்திக்கானில் பாப்பரசர் லியோ XIV உடன் வரிகள் மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, மத்தியஸ்தத்தில் பாப்பரசர் தீவிர பங்கு வகிக்க முடியும் என்று கெல்லர்-சுட்டர், கூறினார்.
பாப்பரசர் லியோ XIV உடனான சந்திப்பு மிகவும் திறந்த, அன்பான மற்றும் தனிப்பட்ட முறையில் அமைந்ததாக அவர் சென் பீட்டர்ஸ் சதுக்கத்தில் தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்துக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் குறித்து, பாப்பரசருடன் பேசினீர்களா என்று கேட்டதற்கு, தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையில் அமெரிக்காவின் பங்கு குறித்தும் விவாதித்ததாக சுவிஸ் ஜனாதிபதி பதிலளித்தார்.
இவை ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்- swissinfo

