இன்று காலை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் தெற்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால், பேரழிவை ஏற்படுத்தக் கூடிய சுனாமி ஆபத்து உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
58 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
முதல் சுனாமி அலைகள் உள்ளூர் நேரப்படி காலை 11:43 மணிக்கு (03:43 GMT) வரக்கூடும் என்றும், அது “ஒரு மணி நேரம் வரை” நீடிக்கக்கூடும் என்றும் பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.
பிலிப்பைன்ஸின் சில கடற்கரைகளில் சுனாமி அலைகள் சாதாரண அலை அளவை விட 3 மீ (10 அடி) வரை உயரக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பூகம்பத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மற்றும் பப்புவா பகுதிகளிலும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

