16.5 C
New York
Wednesday, September 10, 2025

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீன குரு காலமானார்

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக் குருமணியும், உற்சவகாலப் பிரதமகுருவுமான சிவஸ்ரீ வை.மு.பரமசாமிக்குருக்கள் முத்துக்குமாரசாமிக்குருக்கள் நேற்று வெள்ளிக்கிழமை (19) தனது 73 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானார்.

சிவாகம நெறிகளை நன்கு கற்றுத்தேர்ந்தவரும், சிறந்த வேத வித்தகருமான இவர் இந்தியாவில் குருகுலக் கல்வியையும், பட்டப் படிப்பையும் நிறைவு செய்திருந்தார்.

அத்துடன் ஈழத்தின் பல ஆலயங்களின் குடமுழுக்குகளைச் சிறப்புற நெறிப்படுத்திய பெருமையும் இவரைச்சாரும். குருமணியின் இறுதிக்கிரியைகள் இன்று சனிக்கிழமை (20) பிற்பகல் 2 மணியளவில் கோப்பாய் வடக்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெறவுள்ளது.    

Related Articles

Latest Articles