-4.6 C
New York
Sunday, December 28, 2025

உலகில் பார்வையிடச் சிறந்த 25 இடங்களில் இடம்பிடித்த யாழ்ப்பாணம்.

உலகளவில், 2026 ஆம் ஆண்டில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் யாழ்ப்பாணம்  இரண்டாவது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

உலகளாவிய பயண ஊடக நிறுவனமான லோன்லி பிளானட் (Lonely Planet )  ‘சிறந்த பயணங்கள் 2026’ வெளியீட்டின் கீழ்,  இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் முதலிடத்தை அமெரிக்காவின் மைன், இரண்டாமிடத்தில் யாழ்ப்பாணம், மூன்றாமிடத்தில் ரியூனியன் என்பன இடம்பெற்றுள்ளன. லோன்லி பிளானட் யாழ்ப்பாணம் பற்றி வெளியிட்டுள்ள குறிப்பில்,

2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவடைந்ததிலிருந்து, குடும்பத்தினரால் நடத்தப்படும் மலபார் வீட்டு தங்குமிடம் போன்ற தங்கும் விடுதிகள், யாழ்ப்பாணத்தை ஒரு கலாசார பயண இடமாக மீண்டும் உயிர்ப்பித்து வருகின்றன.

யாழ்ப்பாணத்தின் நுணுக்கமான வரலாற்றைப் புரிந்து கொள்ள, போரின் போது தீக்கிரையாக்கப்பட்டு, மீளக் கட்டியெழுப்பப்பட்ட யாழ்ப்பாண பொது நூலகத்தைப் பார்வையிடலாம்.

1619 ஆம் ஆண்டு போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட ஐங்கோண வடிவ யாழ்ப்பாணக் கோட்டை; மற்றும்  அருங்காட்சியகங்களாக மாற்றப்பட்ட இரண்டு பதுங்கு குழிகளை பார்வையிட முடியும்.

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு மணி நேர படகு பயணம் மூலம் நெடுந்தீவை அடையலாம். ஆழமற்ற பாறை, பவளப்பாறைகளால் வேலி அமைக்கப்பட்ட வீடுகள் மற்றும் நெடுந்தீவு கிராமிய தங்குமிடம் போன்ற தங்கும் விடுதிகளுடன், வீட்டில் சமைத்த உணவுகளுக்கு இடையில் மெதுவாகச் சுற்றிச் செல்ல ஏற்ற இடம் அது.

யாழ்ப்பாணத்தில் பயணம் செய்வதற்கு மிதிவண்டி, முச்சக்கர வண்டி, பேருந்து அல்லது படகு என்பன இலகுவானது.

அதே நேரத்தில் தொடருந்துகள் மற்றும் பேருந்துகள் நகரத்தை சிறிலங்கா தலைநகர் கொழும்புடன் இணைக்கின்றன மற்றும் சென்னையிலிருந்து நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக, விருந்தோம்பல் இங்கு ஆழமானது.அங்கு சூடான புன்னகைகள், நுரைமிக்க தேநீர் கோப்பைகள் மற்றும் நண்டு கறி விருந்துகள் ஏராளமாக உள்ளன. என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles