-2.9 C
New York
Sunday, December 28, 2025

எலும்பு முறிவை 3 நிமிடத்தில் சரி செய்யும் சீன விஞ்ஞானிகளின் அதிசயக் கண்டுபிடிப்பு!

சீனாவின் ஜெஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ‘Bone-02’ எனும் புதிய பசையை உருவாக்கி மருத்துவத்துறையில் சாதனை படைத்துள்ளனர்.

தற்போது எலும்பு முறிவு ஏற்பட்டால், முழுமையாக குணமடைய சில மாதங்கள் ஆகும். இதனால் எலும்பு முறிவினால்  பாதிக்கப்பட்டவர்கள் தமது  அன்றாட வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஆனால், ‘Bone-02’ பசை 3 நிமிடத்தில் இரு எலும்புகளையும் துல்லியமாக ஒட்டிவிடக்கூடியது என்று விஞ்ஞானர்கள் தெரிவித்துள்ளனர். சோதனையில் 150 பேருக்கு இதன் செயல்திறன் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும், எலும்பு குணமடையும் போது இந்த பசை உடலால் இயற்கையாகவே உறிஞ்சப்படும், எனவே தற்போதைய அறுவை சிகிச்சை முறைகள் தேவையில்லை. இதன் மூலம் எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் விரைவில் இயல்பான அன்றாட வாழ்க்கைக்கு திரும்ப முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு மருத்துவத் துறையில் புதிய யுகத்தைத் தொடங்கும் வகையில் உள்ளது என்றும், எதிர்காலத்தில் மனித உடலுக்கான சிகிச்சைகளில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles