பாஸல் இல் இன்று அதிகாலை, நகைக் கடையின் கண்ணாடி ஜன்னல் மீது BMW 5 காரை ஓட்டிச் சென்று மோதிய நபர்கள், சேதமடைந்த ஜன்னல் வழியாக கடைக்குள் நுழைந்து நகைகளைத் திருட முற்பட்டுள்ளனர்.
எனினும் அவர்களின் கொள்ளை முயற்சி தோல்வியடைந்த நிலையில், ஃப்ரீ ஸ்ட்ராஸ் வழியாக பார்ஃபுசர்பிளாட்ஸ் நோக்கி காரில் வெறுங்கையுடன் தப்பிச் சென்றனர். அவர்களைக் கைது செய்வதற்கான உடனடித் தேடுதல் தோல்வியடைந்துள்ளது.
தொடர்புடைய தகவல்களை வழங்கக்கூடிய எவரும் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் குற்றவியல் காவல்துறையினரை, தொலைபேசி எண் 061 267 71 11 அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மூலம்- 20min.

