சுவிட்சர்லாந்தில் வர்த்தக தடைகள் மற்றும் மந்தமான பணவீக்கம் 2026 ஆம் ஆண்டிற்கான ஊதிய பேச்சுவார்த்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று UBS வங்கி, அதன் முதலாளிகளின் வருடாந்த கணக்கெடுப்பில் எச்சரித்தது.
பெயரளவு ஊதிய உயர்வுகள் வழக்கமாகவே இருக்கும், ஆனால் 2025 இல் 1.4% உடன் ஒப்பிடும்போது, சுமார் 1% இலேயே நிலைத்திருக்கும்.
தகவல்தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர்கள் சராசரியாக 1.7% அதிகரிப்பை பெறும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள்.
பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், உண்மையான ஊதிய வளர்ச்சி இந்த ஆண்டு 1.2% க்குப் பிறகு 0.5% ஆகக் குறைய வாய்ப்புள்ளது.
பொதுவாக, ஏற்றுமதி நிறுவனங்கள் சராசரியாக 0.2% அதிகரிப்பை எதிர்பார்க்கின்றன.
மூலம்- swissinfo

