இந்த வாரம், சுவிஸ் தொழில்துறையின் உயர்மட்ட பிரதிநிதிகள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் நேரடியாகப் பேச முடிந்ததை அடுத்து, தடைப்பட்டிருந்த அமெரிக்க வரிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைக் காட்டுகின்றன.
இதன்போது, அமெரிக்க ஜனாதிபதி ஒரு ரோலக்ஸ் கடிகாரத்தையும், தங்கக் கட்டியையும் நினைவுப் பரிசாக பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்குள் சுவிட்சர்லாந்துடனான அமெரிக்க வர்த்தக பற்றாக்குறையை நீக்குவதே, குழுவின் நோக்கமாகும்.
மேலும், அடுத்த ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் அமெரிக்காவில் தங்கத்தை உருக்கவும், மருந்துகளில் முதலீடு செய்யவும், உள்கட்டமைப்பு திட்டங்களை ஊக்குவிக்கவும், அமெரிக்காவிலிருந்து விமான இறக்குமதியை அதிகரிக்கவும் அவர்கள் முன்வந்ததாக கூறப்படுகிறது.
எல்லாம் திட்டத்தின் படி நடந்தால், ஜனவரியில் நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தில் ஒரு ஒப்பந்தத்தை முன்வைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி சுவிட்சர்லாந்தின் மீது மேலும் கோரிக்கைகளை வைக்கிறார் என்று அறியப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்காலத்தில் அமெரிக்காவின் முக்கிய பொருளாதாரத் தடைகளை சுவிட்சர்லாந்து ஆதரிக்க வேண்டும் என்று வொசிங்டன் எதிர்பார்க்கிறது.
இரண்டாவது விடயம் முதலீட்டுக் கட்டுப்பாடு பற்றியது, குறிப்பாக சீன நிறுவனங்கள் மூலோபாய தொழில்துறை நிறுவனங்களை வாங்குவதைத் தடுக்கிறது.
ட்ரம்ப் வர்த்தகக் கொள்கையை புவிசார் அரசியல் நலன்களுடன் அதிகளவில் இணைத்து வருகிறார். மலேசியாவும் கம்போடியாவும் ஏற்கனவே அமெரிக்க விதிமுறைகளுக்கு இணங்குவதாக உறுதியளிக்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
அமெரிக்கத் தடைகளை சுவிட்சர்லாந்து ஏற்றுக்கொள்ளும் யோசனை மாயையாகத் தெரிகிறது. இந்தத் திட்டம் அரசியல் அரங்கில் நிராகரிக்கப்படுகிறது.
அமெரிக்காவால் அச்சுறுத்தப்படுவதற்கு அனுமதிக்க முடியாது என்று சென்டர் கட்சியின் தேசிய கவுன்சிலர் எலிசபெத் ஷ்னைடர்-ஷ்னைடர் கூறுகிறார்.
மூலம்- 20min.

