புத்தாண்டு தினத்தன்று கிரான்ஸ்-மொன்டானாவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக, ஜனவரி 9 ஆம் திகதியை தேசிய துக்க நாளாக சுவிஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. சுவிஸ் ஜனாதிபதி கை பர்மெலின் இதனை அறிவித்தார்.
தேசிய ஒற்றுமையின் அடையாளமாக சுவிட்சர்லாந்து முழுவதும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தேவாலய மணிகள் ஒலிக்கும். அந்த நேரத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்படும் என்று பர்மெலின் தெரிவித்தார்.
“இந்த தருணத்தில், சுவிட்சர்லாந்தின் அனைத்து மக்களும் பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களை தனிப்பட்ட முறையில் நினைவுகூர முடியும்,” என்று அவர் கூறினார்.
கிரான்ஸ்-மொன்டானாவில் இறுதிச் சடங்கு நடைபெறும் அதே நேரத்தில் மௌன அஞ்சலியும் தேவாலய மணிகள் ஒலிப்பதும் நடைபெறும்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜனவரி 9 ஆம் திகதி அதிகாரப்பூர்வ நினைவு நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிரான்ஸ்-மொன்டானா நகராட்சி அதன் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.
சுவிஸ் அதிபர் மற்ற அரசாங்க அமைச்சர்களுடன் விழாவில் கலந்து கொள்வார்.
மூலம்- swissinfo

