0.6 C
New York
Wednesday, February 4, 2026

வெள்ளிக்கிழமை அஞ்சலி நிகழ்வில் பங்கேற்கிறார் இத்தாலிய ஜனாதிபதி.

வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள, கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், இத்தாலிய ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது உத்தேச வருகை குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

புத்தாண்டு தினத்தன்று நடந்த தீ விபத்தில் ஆறு இத்தாலிய பிரஜைகள் உட்பட மொத்தம் 40 பேர் இறந்தனர்.

கிரான்ஸ்-மொன்டானாவில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டுள்ள நினைவு நிகழ்வில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் கலந்து கொள்வார்.

பிரான்சின் ஐரோப்பாவிற்கான அமைச்சர் பிரதிநிதி பெஞ்சமின் ஹடாட் மக்ரோனுடன் வருவார். இந்த தீ விபத்தில் ஒரு பிரெஞ்சு-சுவிஸ் இரட்டை குடியுரிமை பெற்றவர் உட்பட, ஒன்பது பிரெஞ்சு நாட்டினர் உயிரிழந்தனர்.

வெள்ளிக்கிழமை தேசிய துக்க தினத்தை அனுசரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுவிஸ் ஜனாதிபதி கை பர்மெலின் அறிவித்துள்ளார்.

அத்துடன் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு சுவிட்சர்லாந்து முழுவதும் தேவாலய மணிகள் ஒலிக்கும்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles