கிரான்ஸ் மொன்டானாவில், ஜனவரி 1 ஆம் திகதி ஏற்பட்ட பயங்கர தீ விபத்தைத் தொடர்ந்து, வலய்ஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகம், லு கொன்ஸ்டெல்லேஷன் பாரில் மேலாளர் ஜாக் மோரெட்டியை கைது செய்து காவலில் வைத்துள்ளது.
வெள்ளிக்கிழமை பாரின் உரிமையாளர்களான மொரெட்டி மற்றும் அவரது மனைவி ஜெசிகா மீதான விசாரணைக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
- Advertisement -

எனினும், ஜெசிகா மோரெட்டி கைது செய்யப்படவில்லை. ஆறு மணி நேர விசாரணைக்குப் பிறகு ஜாக் மோரெட்டி கைது செய்யப்பட்டார்.
பிரெஞ்சு தம்பதியினர் காலை 8 மணியளவில் வலய்ஸ் கன்டோனல் காவல்துறையினரின் பாதுகாப்பில் தங்கள் மூன்று வழக்கறிஞர்களுடன் அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு வந்தனர்.
மூலம்- swissinfo


