21.8 C
New York
Friday, June 19, 2026

மெதுவாக ஊர்ந்த கார் தண்டவாளத்தில் சிக்கியது – இறங்கி ஓடியதால் தப்பினார் 88 வயது தாத்தா.

ஸ்விஸ் கன்டோனின், வோல்லெராவில், ரயில்வே கடவையில், கார் மீ ரயிலி மோதி விபத்து ஏற்பட்டது. 88 வயதான ஓட்டுநர் சரியான நேரத்தில் வாகனத்திலிருந்து வெளியேறியதால் காயமின்றி உயிர் தப்பினார்.

வியாழக்கிழமை மாலை மெதுவாக சென்று கொண்டிருந்த போது, 88 வயதான ஓட்டுநரின் கார், தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டது.

ரயில்வே தடைகள் தாழ்த்தப்பட்டதால், அவர் தனது வாகனத்தை சரியான நேரத்தில் தண்டவாளத்திலிருந்து நகர்த்த முடியவில்லை. அவர் காரை விட்டு இறங்கி பாதுகாப்பான இடத்திற்கு ஓடினார்.

சிறிது நேரத்திற்குப் பின்னர், ரயில் ஓட்டுநர் அவசரமாக நிறுத்த முயன்ற போதும், ரயில் வாகனத்தின் மீது மோதியது.

கார் தண்டவாளத்தின் குறுக்கே பல மீட்டர்கள் இழுத்துச் செல்லப்பட்டது, யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், கார், ரயில் மற்றும் ரயில்வே உள்கட்டமைப்பு ஆகியவை கணிசமான சேதத்தை சந்தித்தன.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles