23.2 C
New York
Wednesday, April 1, 2026

15 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போன சுப்பர்மான் கொமிக் புத்தகம்.

ஒரு சுப்பர்மான் கொமிக் புத்தகம் ஒன்று 15 மில்லியன் டொலர்களுக்கு (சுமார் 12 மில்லியன் சுவிஸ் பிராங்குகள்) விற்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், கொமிக் புத்தகம் ஒன்று இந்தளவு விலைக்கு விற்கப்பட்டதில்லை.

1938 ஆம் ஆண்டு வெளியான இந்த பத்திரிகையின் அப்போதைய விலை 10 காசுகள். இப்போது அது ஒரு பெயர் குறிப்பிடப்படாத சேகரிப்பாளரால் 15 மில்லியன் டொலருக்கு வாங்கப்பட்டுள்ளது.

இந்த பத்திரிகை ஒரு காலத்தில் ஹொலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜுக்கு சொந்தமானதாக இருந்தது.

கடந்த நவம்பரில், சுப்பர்மான் தொடரின் 1939 இதழ் நியூயோர்க்கில் 9.1 மில்லியன் டொலருக்கு ஏலம் விடப்பட்டிருந்த நிலையில் இந்த புத்தகம் அதனை விட சுமார் 6 மில்லியன் டொலர் அதிகமாக விலைபோயுள்ளது.

சமீபத்தில் விற்கப்பட்ட கொமிக் புத்தகம் ஒரு அரிய பிரதி என்றும், மிகவும் நல்ல நிலையில் உள்ளது. அட்டைப்படத்தில் சுப்பர்மான் ஸ்பான்டெக்ஸ் பான்ட் மற்றும் சிவப்பு தொப்பியுடன் ஒரு பச்சை காரை காற்றில் தூக்குவது போல படம் இடம்பெற்றுள்ளது என்றும் ஏல நிறுவன உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles