பார்க்கிங் கட்டணத்தை உயர்த்துவதற்கு எதிராக சூரிச் விமான நிலையத்தில் 5000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
பார்க்கிங் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பார்க்கிங் நேர வரம்புகளும் குறைக்கப்படுகின்றன. இந்த மாற்றங்கள் மே 2026 இல் அமுலுக்கு வரவுள்ளது.
சூரிச் விமான நிலையம் 2024 இல் 327 மில்லியன் சுவிஸ் பிராங்குகளின் சாதனை லாபத்தைப் பதிவு செய்தது. இருந்த போதிலும், குறிப்பாக ஊழியர்கள் மத்தியில் பரவலான எதிர்ப்பைத் தூண்டிய ஒரு முடிவு இப்போது எடுக்கப்பட்டுள்ளது.
மே 1, 2026 முதல், சில வகைகளில் பார்க்கிங் கட்டணம் 30 சதவீதம் வரை அதிகரிக்க உள்ளது. மேலும், வாடகைக்கு எடுக்கப்பட்ட பார்க்கிங் இடங்களில் அதிகபட்ச பார்க்கிங் நேரம் 36 மணிநேரமாகக் குறைக்கப்படும் – முன்பு இது பத்து நாட்களாக இருந்தது.
இதற்கு எதிராக 5,000க்கும் மேற்பட்ட விமான நிலைய ஊழியர்கள் ஒரு மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். அவர்கள் VPOD தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஸ்டீபன் புருலிசாவர் அவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள்.
தரை ஊழியர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னர் ஊழியர்கள் ஒரு பார்க்கிங் இடத்திற்கு மாதத்திற்கு அதிகபட்சமாக 140 பிராங்குகள் செலுத்தினர் . இப்போது பார்க்கிங் கட்டணம் மாதத்திற்கு 60 பிராங்குகள் வரை அதிகரித்துள்ளது. என்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் விமான நிலையம் கட்டண அதிகரிப்பு திட்டத்தை மாற்றுவதில்லை எனத் தீர்மானித்துள்ளது.
மூலம்- 20min

