டாவோசில் நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்ற மாநாட்டை முன்னிட்டு பல அமெரிக்க விமானப்படை விமானங்கள் சுவிட்சர்லாந்திற்கு வரத் தொடங்கியுள்ளன.
அமெரிக்க விமானப்படை C-17A குளோப்மாஸ்டர் III போக்குவரத்து விமானம் புதன்கிழமை பிற்பகல் சூரிச் விமான நிலையத்தில் தரையிறங்கியது. பல C-17 விமானங்கள் ஏற்கனவே சுவிட்சர்லாந்திற்கு வந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் மற்றொரு விமானம் வந்துள்ளது.
போயிங் C-17 குளோப்மாஸ்டர் III என்பது துருப்புக்கள் அல்லது பெரிய சுமைகளை ஏற்றக் கூடிய அமெரிக்கத் தயாரிப்பான பல நோக்கு நான்கு இயந்திர இராணுவ போக்குவரத்து விமானமாகும்.
அதேவேளை, நேற்று பிற்பகல் டுபென்டார்ஃப் விமான நிலையத்தில் நான்கு சிகோர்ஸ்கி UH-60 “பிளாக் ஹாக்” ஹெலிகொப்டர்களும் தரையிறங்கியுள்ளன.
மூலம்- 20min.

