இத்தாலிய அதிகாரிகளிடமிருந்து நான்கு ஆண்டுகளாக தப்பித்து வாழ்ந்த என்ட்ராங்கெட்டா மாஃபியா அமைப்பின் சந்தேக உறுப்பினர் சுவிஸ் நகரமான வெட்ஸிகானில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இப்போது இத்தாலிக்கு நாடு கடத்தப்படுவதற்காகக் காத்திருக்கிறார் என சூரிச் கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குற்றவியல் மாஃபியா அமைப்பில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு, 2022 ஆம் ஆண்டு தெற்கு இத்தாலியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. பல மாதங்களுக்குப் பிறகு, அவர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின் கீழ் வந்ததாக இத்தாலிய செய்தி நிறுவனமான அட்ன்க்ரோனோஸ் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் வெட்ஸிகானில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் கைது செய்யப்பட்டார். மத்திய காவல் அலுவலகமும் (ஃபெட்போல்) இந்த நடவடிக்கையில் பங்கேற்றது.
மூலம்- swissinfo

