பொன்ட்ரெசினா அருகே பிஸ் ஆல்வ்வில் உள்ள வால் டா ஃபைனில், சனிக்கிழமை மாலை ஏற்பட்ட பனிச்சரிவில், ஸ்கை சுற்றுலா குழுவைச் சேர்ந்த சிலர் சிக்கிக் கொண்டனர். அவர்களில் ஒருவர் இறந்தார், மற்றொருவர் காயமடைந்தார்.
நான்கு பேர் கொண்ட குழு ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்தவர்களே இந்த ஆபத்தில் சிக்கியுள்ளனர் என்று கிராபுண்டன் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
- Advertisement -

சனிக்கிழமை மாலை 5:30 மணிக்குப் பின்னர் அவசர அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து, ஒரு தேடல் விமானம், காயமடைந்த ஒருவரை கண்டுபிடித்தது. ஒரு ஹெலிகொப்டர் அவரை சமேதானில் உள்ள ஓபெரெங்கடின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.
பனிச்சரிவில் புதைந்த 53 வயதுடையவரின் உடலை மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர்.
மூலம்- bluewin


